ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் கூன்ஜ் தன்னார்வ நிறுவனத்திடம் பயன்பாட்டு பொருட்கள் ஒப்படைப்பு!!

 

   கோவை உள்ள எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உள்ளோருக்கு உதவும் வகையில் கூன்ஜ் தன்னார்வ நிறுவனத்திற்கு பயன்பாட்டுப் பொருட்கள் 13.10.2023 (வெள்ளிக்கிழமை) அன்று அனுப்பி வைக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் திருமதி ஸ்வாதி ரோகித் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 14 கல்வி நிறுவனங்களின் நாட்டுநலப் பணித்திட்டத்தின் மூலம் பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட பொருட்களை சென்னைக்குக் கொண்டு செல்லும் வாகனத்தைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களான பொறியியல், பாரா மெடிக்கல், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி போன்றவற்றில் பணிபுரியும் பேராசிரியர்கள், பயிலும் மாணவர்கள், கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கடந்த 21.09.2023 முதல் 12.10.2023 வரை 22 நாட்களாக வீடுகளில் பயன்படுத்தாத நல்ல நிலையில் உள்ள உடைகள், மாணவர்களுக்கான எழுது பொருட்கள், பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டது.  இந்தியா முழுவதும் உடைகள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டு பொருட்கள் தேவையுள்ளோருக்கு கூன்ஜ் தன்னார்வ நிறுவனத்தின் மூலம் முறையாக மறுசுழற்சி செய்யப்பட்டு புதிதாக பயன்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. கோயம்புத்தூரிலேயே முதன்முறையாக என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் கல்வி நிறுவனங்கள் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், எஸ்.என்.ஆர். சன்ஸ் மக்கள் தொடர்பு மேலாளர் & நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரகதீஷ்வரன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments