கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், யானைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், யானைத்திருவிழா ஒரு வாரகாலமாக நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட வனத்துறை, இந்திய வன உயிரின அறக்கட்டளை, ஓசை அமைப்பு சார்பில், கடந்த மாதம் 29ம் தேதி முதல் யானைத்திருவிழா நடத்தப்படுகிறது. நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், நடந்த நிகழ்ச்சியில், யானைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

குழந்தைகள், பெரியவர்கள் என, பல்வேறு தரப்பினரும் புகைப்படங்களை பார்த்து விளக்கங்களை கேட்டறிந்தனர். யானைகளை காப்பாற்ற வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. முன்னதாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments