கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளி குழந்தைகள் கொழு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர்!!

கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த  குழந்தைகள் கொழு பொம்மைகள்  போல வேடமிட்டு அசத்தினர்.

நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவர். இந்நிலையில், கோவைபுதூர்  வித்யாஸ்ரமம் மழலையர் பள்ளி குழந்தைகள் கொலு பொம்மைகள் போல நூறுக்கும் மேற்பட்ட வேடமணிந்து அசத்தியுள்ளனர். காலை ஆறு மணியில் இருந்தே  தர்மர்,அர்ச்சுனர்,பழனி முருகர்,மதுரை மீனாட்சி,கருமாரியம்மன் என தெய்வங்கள் வேடத்தை அணிய துவங்கிய குழந்தைகள், பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கொலு அலங்காரத்தில் நடைபெற்ற  பூஜையில் தெய்வங்களாக  கலந்து  கொண்டனர்.

இதில் கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளார் தேவேந்திரன்,அறங்காவலர் கவரி,நிர்வாகி  உதயேந்திரன்,வித்யாஸ்ரமம் பள்ளியின் செயலாளர் சௌந்தர்யா மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து  மழலையர்  பள்ளியில் பயிலும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட  சிறு குழந்தைகள்  விழாவில்,கொழு பொம்மைகள் போல வேடமிட்டு காண்போரின் கவனத்தை ஈர்த்தனர். 

இதில்,அஷ்டலட்சுமி,தசாவதாரம்,அறுபடை வீடு,பஞ்ச பாண்டவர், அம்மன்,சிவன் குடும்பம்,ராமர்,என ஒவ வொரு குழுவாக  அவதரித்த தெய்வங்கள் போல வேடமிட்ட குழந்தைகள் தத்ரூபமாக கொலு பொம்மைகள் போல அணிவகுத்து நின்றனர்.

-சீனி, போத்தனூர்.

Comments