கோவையில் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு நிதி திரட்டும் தாண்டியா நடன நிகழ்ச்சி!!

கோவையில் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி சார்பாக தாண்டியா நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

 நவராத்திரி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்,கோவையில், ரோட்டரி கிளப் ஆப் காட்டன்சிட்டி சார்பாக   கலா தாண்டிய நிகழ்ச்சி வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கில்  நடைபெற்றது.

புற்றுநோய் பாதித்தவர்களுக்கு  நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த 500 க்கும்  மேற்ப்பட்ட ஆண்கள்,பெண்கள் கலந்துக்கொண்டு 'கர்பா மற்றும் தாண்டியா நடனம் ஆடி மகிழ்ந்தனர். 

வண்ண உடைகள் அணிந்து வடஇந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தாண்டியா நடனம் ஆடியது காண்பவர்களையும் உற்சாகப்படுத்தியது…இந்நகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி நிர்வாகிகள் கிருஷ்ணா சாமந்த்,நீத்திகா பிரபு,குமார் பால் ,சந்தோஷ்,மோனிஷா பட்டேல் மற்றும் கோ கிளாம் ஹீனா,ராகுல் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments