உயர் கோபுர மின்விளக்குகள் இருந்தும் பயனில்லை!! வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பழுதடைந்த மின் விளக்குகள் இருந்து என்ன பயன்?!!!

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள வாட்டர் ஃபால் டிவிசன் போஸ்ட் ஆபீஸ் அருகில் உள்ள உயர் மின் விளக்கு கோபுரம் பழுதடைந்து பல நாட்கள் ஆகியும் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை வால்பாறை நகராட்சி மற்றும் அப்ப பகுதியில் உள்ள என் சி டிவிஷன் பகுதியில் சோளக்குறுக்கு வழித்தடம் என்று அழைப்பார்கள்,

https://youtu.be/tcEc0-tcCKU

 அப்பகுதியில் நீண்ட நாட்களாக மின்விளக்கு பழுதாகியும் அதை சரி செய்யாமல் உள்ளார்கள் அப்பகுதி பகல் நேரங்களிலேயே யானை கரடி போன்ற வனவிலங்குகள் உலா வரும் இடமாக உள்ளதால்  பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழுதடைந்துள்ள மின் விளக்கை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments