வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக மனநல தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

-MMH

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு வ.உ.சி மேல்நிலைப்பள்ளியில் உலக மனநல தினத்தையொட்டி   விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் டாக்டர் இர. ஜோனா அவர்கள் மனநல குறித்தும் போதைப்பொருள் பற்றியும்,  அதானால் ஏற்படும் விளைவுகளை குறித்தும் பள்ளி மாணவ மாணவர்களிடம் உரையாடினார்.

எப்போதும் கைபேசி பயன்படுத்தும் ஒருவகையான மனநோய் மற்றும்  தொலைக்காட்சி  , போதைப்பொருள் பற்றியும்  பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

TELE MANAS நட்புடன் உங்களோடு மனநலப் சேவை 14416, மற்றும் மனநல மாவட்டம் ஆலோசனை மையம் தூத்துக்குடி மாவட்டத்தின் தொலைபேசி எண் 9488044723 பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.   "மன நலம் - அனைவருக்குமான மனித உரிமை"

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments