ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் பள்ளி மாணவர்கள் சாதனை! 2024 தேசிய அளவிலான கராத்தே சேம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி .!!!
தூத்துக்குடி மாவட்டம்
ஓட்டப்பிடாரம் ,டிஎம்பி மெக்கவாய் பள்ளியைச் சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்ட வீரர் , வீராங்கனைகள் கிங்ஸ் இண்டர்நேஷனல் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியால் தேர்வுசெய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக அக்டோபர் 29அன்று திருநெல்வேலியில் நடைப்பெற்ற மாநில அளவிலான கராத்தே சேம்பின்ஷிப் போட்டியில் வெற்றிப்பெற்று மகத்தான சாதனைப்படைத்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வெற்றிப் பெற்ற வீரர் ,வீராங்கனைகள் வருகின்ற 2024 பிப்ரவரியில் நடைப்பெற உள்ள தேசிய அளவிலான கராத்தே சேம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்க தகுதிப்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிப்பெற்ற குழந்தைகளை பள்ளிநிர்வாகி உயர்திரு K.ஜேம்ஸ் பாஸ்கர், மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை நல்லாசிரியர் திருமதி G. வனஜா மங்கள செல்வி , ஆரம்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் உயர்திரு ரெங்க இராமானுஜம் (ஓய்வு), ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் திரு .S.கமலக்கண்ணன் மற்றும் பள்ளியின் கராத்தேப்பயிற்சியாளர் சென்செய் L.சூர்யா உள்ளிட்டோர் வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.
Comments