வ.உ.சிதம்பரனார் 87ஆவது நினைவு தினத்தையொட்டி உருவ சிலைக்கு ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை.!!!!

 

-MMH

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 87வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள்  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது .

இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று நம்பினார். வ.உ.சி. அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. ஆனால் வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.

தமிழ் நாடு முழவதும்  நேரில் வரமுடியாத பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள்  அவரது உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன் மாவட்ட ஆதிதிராவிட தலைவர் துரைமுருகன் மற்றும் ஹரிஹரன்,  அன்புராஜ்  செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர் 

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments