பட்டாசு வெடித்த சத்தத்தில் மிரண்டு ஓடிய கடாமான்கள்!! வன விலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என பொதுமக்கள் வேண்டுகோள்!!!

 

-MMH

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு  தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் அதிக அளவில் வந்துள்ளனர் இதனால் வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தளங்கள் அனைத்தும் மக்கள் வெள்ளத்தில் அலைமோதியது இந்த சூழ்நிலையில் கவர் கல் எஸ்டேட் பகுதியில்  தீபாவளி பண்டிகையை கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள் சாலையில் பட்டாசு வெடித்தனர் இதனால் அந்த பகுதியில் புற்களை மேய்ந்து கொண்டிருந்த கடமான்கள் மிரண்டு ஓடியது.இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வன விலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் வனவிலங்குகள் உள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். சாலைகளில் வெடி வெடிப்பதால் காட்டு மிருகங்கள் மிரண்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்  

-சி.ராஜேந்திரன்.

Comments