வால்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தை கூட்டங்கள்!!!

 

கோவை மாவட்டம் வால்பாறையில் சமீப  காலமாக வனவிலங்குகள் குடியிருப்புக்கு அருகில் உலா வருவது அதிகரித்துள்ளது மேலும் வால்பாறையை சுற்றிலும்  50க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளிலும் யானை, சிறுத்தை,  கரடி போன்ற வன விலங்குகள் உலா வருகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறையில் உள்ள கோ- ஆப்பரேட்டிவ் காலனி, துளசி நகர்,  பி ஏ பி காலனி, பி எஸ் என் எல்  குடியிருப்பு, அண்ணா நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் கூட்டமாக உலா வருகின்றன இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 

இந்த பகுதியில் பொதுமக்கள் வளர்த்து வரும் ஆடு,  மாடு, கோழி மற்றும் நாய் போன்ற பிராணிகளை வேட்டையாடி வருகின்றன. 

இன்னும் சில பகுதிகளில் பகல் நேரங்களில் கூட சிறுத்தைகள் உலா வருகின்றன இதனைக் கண்டு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே இதற்கு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து வனவிலங்குகள்  குடியிருப்பு அருகில் வராமல் தடுத்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

சி.ராஜேந்திரன் மற்றும் 

வால்பாறை பகுதி நிருபர் 

திவ்யகுமார்.

Comments