கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா.!!!!

 

-MMH

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே  குழந்தைகள் தின விழா கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்புடன் நடைபெற்றது. பள்ளித்தலைமையாசிரியர் அன்புநாதன் குழந்தைகளுக்கான பிரார்த்தனையை நிறைவேற்றினார். 

குழந்தைகள் பற்றிய கவிதையை தமிழாசிரியர் பிரபாகரன் வாசித்தார். பள்ளித் தாளாளர் வின்சென்ட் மற்றும் ஆசிரியை லீலா வாழ்த்துரை வழங்கினர். குழந்தைகள் தின கலையிலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

பண்டித நேரு அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை சந்தியாகு அவர்கள் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியை ஆசிரியை அமலி தொகுத்து வழங்கினார். இறுதியில், மாணவர் பேரவைத் தலைவர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments