கருமலை எஸ்டேட் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட நிழல் குடை கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?!!!

-MMH

  கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. பன்னிரண்டாவது வார்டு கருமலை எஸ்டேட் பஜார் பகுதியில் புதிய நிழற்குடை கட்டி முடித்தும் பொதுமக்களின் பயன் பாட்டுக்கு வராமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பொதுவெளியில் நின்று பேருந்து ஏறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் ஏறுவதற்கு சிரமப்பட்டு சாலையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பயணிகள் நிழற்குடையை திறந்து வைப்பதற்கு நகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கருமலை எஸ்டேட் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments