மருதமலை முருகன் கோவிலுக்கு சாலை மார்க்கமாக வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு தடை!!!

 

-MMH

கோவை மருதமலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பக்தர்களால் முருகனின் ஏழாம் படைவீடு என அழைக்கப் படுகிறது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் வருடந்தோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.  சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன் மண்டபத்தில் ஆடும் மயில் வாகனத்தில் தண்டாயுதபாணி பக்தர்களுக் காட்சியளித்தார்.  கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி அதிகாலை 5. 30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜையுடன் விழா தொடங்குகிறது. மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹா ரத்தை முன்னிட்டு  சனிக்கிழமை மற்றும் 19-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 தினங்கள் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் கோவில் சார்பில் இயக்கப்படும் வாகனங்களிலும், மலைப்படிக்கட்டுகள் வழியாகவும் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய கேட்டுக்     கொள்ளப் படுகிறார்கள். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments