அரைஇறுதி: இந்தியா- நியூசிலாந்து இன்று மோதல்...

 

-MMH

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது. 

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

நியூசிலாந்து: கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டாம் லாதம், மிட்செல் சான்ட்னெர், லோக்கி பெர்குசன், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட். இந்த போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments