மேட்டுப்பாளையம் ரோடு டி.கே மார்க்கெட் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம்!!!

 

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ளது டி.கே.மார்க்கெட்.  இங்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களின் மூலம் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு கோவையை சுற்றிலும் உள்ள வியாபாரிகளால் வாங்கப்பட்டு, கோவையை சுற்றிலும் உள்ள மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த மார்க்கெட் பகுதியில் சுகாதாரம் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. மார்க்கெட் பகுதியைச் சுற்றிலும் ஆங்காங்கே கழிவு செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் குப்பை கூலங்கள் சேர்ந்து குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. 


கடந்த சில நாட்களாக துப்புரவு பணி மேற்கொள்ளப் படாமல்  இருப்பதால் மார்க்கெட் பகுதிக்குள் செல்ல முடியாத அளவுக்கு சீர்கேடாக உள்ளது இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக துப்புரவு பணியை மேற்கொண்டு மார்க்கெட் பகுதியை தூய்மை படுத்த வேண்டுமாறு  மார்க்கெட் பகுதியை சேர்ந்த  வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வேண்டுகோள் விடுக்கிறார்கள். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

சி.ராஜேந்திரன்.

Comments