பசுவந்தனை அருகே வடக்குகைலாசபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினர்...

 

-MMH

தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்,பசுவந்தனை ஊராட்சி வடக்குகைலாசபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியினையும், ரூ.7.47-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

பின்னர் பொதுமக்களின்  குறைகளை கேட்டறிந்தார்  அருகில் உள்ள நடுநிலை பள்ளியை பார்வையிட்டார்.  இந்தநிகழ்வில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ் ஓட்டப்பிடாரம் துணை ஒன்றிய பெருந்தலைவர்,ஓட்டப்பிடாரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் வட்டார வளர்ச்சி ஆணையர்  சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்   கிரி,  தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் பசுவந்தனை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிசிதம்பரம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேஷ்வேல்,


வெள்ளைச்சாமி எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா  மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ் M.சண்முகபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் U.Mசங்கர் கிளைச் செயலாளர்கள் அய்யம்பிள்ளை, சுப்பிரமணியன்  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி  ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments