சுகுணா சர்வதேச பள்ளி சார்பாக நடைபெற்ற விளையாட்டு தின விழா...

 

-MMH

சுகுணா சர்வதேச பள்ளி சார்பாக நடைபெற்ற விளையாட்டு தின விழாவில் மாணவ,மாணவிகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சுகுணா சர்வதேசப்பள்ளியின் 2023-24 ஆம் ஆண்டிற்கான  விளையாட்டு விழா கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல் துறை ஆணையர்  பாலகிருஷ்ணன் மற்றும்  திருச்சியைச் சேர்ந்த தெற்கு ரயில்வே தடகள பயிற்சியாளர்  அண்ணாவி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில்,. பள்ளியின் அறங்காவலர்  ராஜாமணியம்மாள். தலைவர் சுகுணா ஆகியோர் தலைமை தாங்கினார்.. . பள்ளியின் இயக்குநர்  அந்தோணிராஜ் முதல்வர் பத்மாவதி பஞ்சாபகேஷன், தலைமை ஆசிரியை .அனிதா, மழலையர் பள்ளியின் பொறுப்பாளர்  இலட்சுமி ராமநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை  வரவேற்றனர்.


தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள்   தேசியக் கொடியை ஏற்றி விழாவினைத் தொடங்கி வைத்ததோடு நிலம், நீர், காற்று, நெருப்பு முதலிய அணிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.. தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளின்   பல்வேறு விளையாட்டு நிகழ்வு சார்ந்த பயிற்சி நடனங்கள் நடைபெற்றன.இதில்  ரிப்பன் நடனம். சார்லிசாப்லின் நடனம், ஏரோபிக்ஸ் நடனம், மென்பந்து நடனம், லெசிம் நடனம், சிலம்பாட்டம், கார்டியோ உடற்பயிற்சி போன்ற நிகழ்வுகளும் ரிலே. ஓட்டப்பந்தயம், யோகா, மாணவர்களின் அணிவகுப்பு, மாணவிகளின் நடனம் ஆகியன பார்வையாளர்களின் கண்களைக் கவர்ந்தன. விழாவின் கௌரவ விருந்தினர் அண்ணாவி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்…விழா நிறைவாக விளையாட்டுத்துறைச் செயலாளர்கள்  பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பிரனேஷ் மாணவி கோகிலா நன்றியுரை வழங்கினர்..

-சீனி, போத்தனூர்.

Comments