கோவை மண்டலத்தில் ஜீப் இந்தியா தனது வாகன விற்பனையை விரிவு படுத்தும் விதமாக தனது புதிய வர்த்தக பிரிவாக எஸ்.ஜி.ஏ. ஜீப் புதிய கிளை துவங்கப்பட்டது…

 

-MMH

ஜீப்  இந்தியா தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக கோவை சாய்பாபாகாலனி பகுதியில் எஸ்.ஜி.ஏ.ஜீப் எனும்  பெயரில்  புதிய கிளையை தொடங்கியுள்ளது. கோவை மண்டலத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் கிளையின் மூலம் திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய இடங்களில்  வசதியை வழங்க முடியும். சுமார்  2,100 சதுர அடியில் அமைந்துள்ள இந்த புதிய .ஷோரூமில் ஜீப் நிறுவனத்தின்  கிராண்ட் சேரோகி, ரேங்குலர், மெரிடியன் ஆகிய மாடல்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.. 25 ஆயிரம் சதுர அடியில் 12 வகையிலான பிரத்தியேக பணிமனை,,, உயர் பயிற்சி பெற்ற சேவை பணியாளர்களுடன் இந்த கிளை இயங்க உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான பணிமனை, உதிரி பாகங்கள் விற்பனையகம் என ஒரே இடத்தில், உலக தரம் வாய்ந்த சேவை அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதிய டீலர் பார்ட்னரை வரவேற்று ஜீப் இந்தியா ஆபரேஷன் தலைவரும், ஸ்டலேந்தீஸ் ஆண்டீஸ் இந்தியா துணை நிர்வாக இயக்குனருமான ஆதித்யா ஜெயராஜ் கூறுகையில், 

இந்தியாவில் ஜீப் ரக வாகனங்களை விற்பனை செய்வதற்கு தமிழகம் ஒரு முக்கியமான மாநிலம் என கூறினார். SGA உடன் இணைந்து இருப்பதன் மூலம் கோயமுத்தூர் மண்டலத்தில் ஜீப் ரக வாகனங்களின் தேவையை வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதில் பூர்த்தி செய்ய முடியும் என்று நம்புவதாக கூறினார். இதுவரையில் 72 கிளைகளை தொடங்கியுள்ளதாகவும், புதிதாக இணைந்துள்ள நிறுவனத்துடன் சேர்த்து கூடுதலாக 80 கிளைகளை 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கி விட முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். புதிய கிளை திறப்பு விழா குறித்து கருத்து தெரிவித்த SGA குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அற்புதராஜ், ஜீப் இந்தியா நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்திருப்பதன் மூலம் கோயம்புத்தூர் சந்தையில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.. நிகழ்ச்சியில்,பிரசாத் பன்சால்கார்,மரியா பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments