ஒட்டப்பிடாரத்தில் தீண்டாமை ஒழிப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.!!!

 


தமிழ் நாடு விவசாய சங்கம் ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்கம் தீண்டாமை ஒழிப்பு  இயக்கம்  சார்பில் கடந்த மாதம் ஹைதராபாத்தில் மாநாடு நடந்தது. அதில் இந்திய முழுவதும் 100க்கு தலித் அமைப்புகள் கலந்து கொண்டனர் , இதை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றம் செய்ய   வருகின்ற டிசம்பர் 4 டெல்லி பல லட்சம் மக்களை திரட்டி மிகப்பெரிய பேரணி நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு லட்சம் கையெழுத்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வருகிறது 17ஆம் தேதி மாநாடு நடக்கிறது. அதற்குள் இந்த கையெழுத்து இயத்தை முடிக்க வேண்டும். தமிழ் நாடு அரசுக்கு ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழங்குடி மக்களின் மீது தாக்குதல் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது தமிழ்நாட்டில் திருநெல்வேலி நேற்று நடந்தது. தமிழ் நாடு தீண்டாமை இயக்கம் சார்ந்த அமைப்பு மீக திவரமாக மக்கள் இயக்கமாக மற்ற இந்த கூட்டம் நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஓட்டப்பிடாரம் பஜாரில் தீண்டாமை ஒழிப்பு மாவட்ட தலைவர் ஊர்காவலன் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை சங்க மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலையிலும் பட்டியல் இன மக்களின் உரிமைகளுக்கான கோரிக்கை சாசன கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

https://youtu.be/lxa9JVc8vW4

இந்நிகழ்ச்சியை தீண்டாமை ஒழிப்பு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் பொது சொத்துகளில் பட்டியல் இன மக்கள் உரிய பங்கினை பெற சட்டம் இயற்ற வேண்டும் நிலமற்ற கிராமப்புற மக்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கிட வேண்டும் பட்டியல் சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் அம்மக்களிடமே இருப்பதை உறுதி செய்திட வேண்டும் கொத்தடிமை தொழிலாளர் சட்டம் 1976 ஐ உறுதியான முறையில் அமலாக்கிட வேண்டும் குழந்தை தொழிலாளர் முறைமையை அடியோடு ஒழித்திட வேண்டும் தனியார் துறைகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கிட வேண்டும் அரசு துறைகளில் உள்ள இட ஒதுக்கீடு நிலுவை காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மீட்கப்பட வேண்டும் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் என்னும் மனித தன்மையற்ற நடைமுறைகள் தடை செய்யப்பட வேண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை முறையாக அமலாக்கிட வேண்டும் கூலி பாக்கிகள் உடனடியாக வழங்க வேண்டும் 200 நாட்கள் வேலையும் ரூபாய் 600 ஊதியமும் வழங்க வேண்டும் பட்டியல் சாதி பழங்குடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகாத வகையில் அமலாக்கிட வேண்டும் விரைவு நீதிமன்றங்கள் அமைத்து இடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு மாவட்ட தலைவர் காசி, அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் முத்து கட்டுமான தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் மாரியப்பன் வன்னியராஜ் ராஜகணி ராஜமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர் 

முனியசாமி.

Comments