சாலையில் உலா வரும் யானை கூட்டம்!! அரசு பேருந்தை வழிமறித்து துரத்தியதால் பரபரப்பு!!!

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் இருந்து வெள்ளியங்காடு வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மூன்றாவது வழித்தடமாக முள்ளி மஞ்சூர் சாலை உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சாலையானது அடர்ந்த வனப்பகுதி நடுவே அமைந்துள்ள நிலையில் யானை, கரடி, மான், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இந்த சாலை பகுதியில்  அதிகம் உள்ளது. அதே சமயத்தில் இவ்வழியாக அரசு பேருந்தும் மஞ்சூர் வரை இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் குட்டியுடன்  யானை கூட்டம் ஒன்று முள்ளி-மஞ்சூர் சாலை வனப்பகுதியில் நடமாடி வருகிறது. அவைகள் அவ்வப்போது சாலையில் உலா வருகின்றன அதேபோல் நேற்றும் சாலையின் ஓரத்தில் யானை கூட்டம் உலா வந்துள்ளது. பின்னர் சாலையின் நடுவே நின்ற ஒரு காட்டு யானை அந்த வழியாக வந்த அரசு பேருந்தினை வழிமறித்தது பின்னர் பேருந்தினை ஓட்டுநர் முன்னோக்கி செலுத்த முயன்ற போது அந்த யானை கோபமடைந்து ஆக்ரோசமாக பேருந்தை நோக்கி துரத்தி வந்தததால் சுதாரித்த ஓட்டுநர் வேகமாக பின் நோக்கி இயக்கிய நிலையில் அந்த யானை திரும்பி சென்றது. தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் மீண்டும் சாலையில் நடந்து சென்று பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் யானை கூட்டத்தை ஆச்சரியத்துடன் கண்டு வீடியோ எடுத்தனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments