தமிழ்நாடு அரசாங்கம் ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்சாலை அமைக்கப்பட்டது!!

தமிழ்நாடு அரசாங்கம் நடத்திய உலக முதலீர் மாநாட்டால், இந்தியாவில் முதன் முறையாக கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

உலக அளவில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் சீனாவை விட இந்தியாவுக்கு அதிகம் வந்துகொண்டிப்பதாக ஜப்பானை சேர்ந்த மக்கினோ நிறுவன அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டிலேயே முதன் முறையாக, ”ஃபிக்சர் மேனுஃபேக்சரிங்” என்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன், ஜப்பானை சார்ந்த மகினோ என்ற தொழிற்சாலை கோவை கருமத்தம்பட்டியில் நிறுவப்பட்டது. ஜப்பானில் 85 வருடங்களாக இயங்கும் மகினோ நிறுவனம், கோவையில் முதலீடு செய்த நிலையில், அதிநவீன தொழில்நுட்பத்துடனான மகினோ தொழில் கூட திறப்பு விழா நடைபெற்றன. 

அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இன்ஜினியரிங் உற்பத்தி பணிகள் செய்யும் முறையான ”ஃபிக்சர் மேனுஃபேக்சரிங்” என்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன், ஏரோ ஸ்பேஸ் மற்றும் ஆட்டோ மோட்டிவ் எலக்டானிக் துறைகளுக்கான பாகங்களை தயாரிக்கும் இயந்திரங்களை, இதில் உற்பத்தி செய்யவிருக்கின்றனர். இந்த கமெனியின் துவக்க விழாவில் மகினோ கம்பெனியின் ஜப்பான் மற்றும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டனர். 

இந்தியாவில் இயங்கும் ஜப்பானின் மகினோ கம்பெனிகளுக்கான தலைவர் ராகோ பாத்தியா மற்றும் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, 2021ல் கோவையில் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்த தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு ஜப்பானின் மகினோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், ஒப்பந்தம் கையெழுத்தான நாள் முதல் தமிழ்நாட்டின் அதிகாரிகள் உதவ முன்வந்தனர் . கம்பெனி கட்டமைப்பு சாரத்தை அறிந்து, நிலத் தேர்வு முதல் தொழிற்சாலையின் நவீன தொழில்நுட்பத்தை அமல்படுத்த போதுமான வசதிகள் வரை அனைத்தும் செய்து தந்தனர். தொழிற்சாலை கட்டமைப்பு  பணிகள் நடக்கும்போது தமிழ்நாட்டின் அதிகாரிகள் உடன் இருந்து பயணித்தனர். ஒவ்வொரு முறையும் பணிகள் முடியும் வரை அழைத்து ஃபாலோ செய்தனர்.

இந்த நிலையில், பொறியியல் உற்பத்தித் துறை இங்கு சிறந்து விளங்குவதால், ஏராளமான வெளிநாட்டு கம்பெனிகள் கோயமுத்தூரில், தொழில்கூடங்களை அமைப்பார்கள். ஜப்பான் கம்பெனிகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாட்டு கம்பெனிகளும் கோயம்புத்தூர் நகரத்திற்கு வர வாய்ப்பு இருக்கின்றது. ஜப்பான், ஐரோப்பிய நாட்டு கம்பெனிகளின் முதலீட்கள், சீனாவை விட இந்தியாவில் அதிகம் வந்து கொண்டிருக்கிறன. 

கோவைவில் அமைந்துள்ள இந்த ”ஃபிக்சர் மேனுஃபேக்சரிங்”  தொழில் நுட்பத்துடனான இந்த கம்பெனியின் தயாரிப்புகள் உலக தரத்தில் இருக்கும். ஏரோ ஸ்பேஸ் மற்றும் ஆட்டோ மோட்டிவ் எலக்ட்ரானிக் துறைக்கான தயாரிப்புகள் மகினோ கம்பெனியில் தயாரிக்கப்படும். 

ஜப்பானின்”ஃபிக்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்பத்தில்  தொழிற்சாலை இயங்குவதனால், இதன் தயாரிப்புகள் தரமாகவும் துல்லியமாகவும் தயாரிக்கப்படும். இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன தொழில்நுட்பத்துடன் மகினோ மெஷின் டூல் கம்பெனி கோயமுத்தூரில் இன்று துவங்கிய நிலையில், இதன் கிளைகள் அதிகளவில் கட்டமைக்க திட்டமிட்டிருக்கின்றோம் என அவர்கள் தெரிவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments