சாய் கண்ணன் பட்டாசு கடை திறப்பு விழா: ஆதரவற்ற குழந்தைகளுக்கு பட்டாசு, புத்தாடைகள் வழங்கப்பட்டது ...

 




-MMH

சாய் கண்ணன் பட்டாசு கடை திறப்பு விழாவில், ஆதரவற்றோர் 50 பேருக்கு புத்தாடைகள், பட்டாசுகள்  வழங்கப்பட்டது. கோவை பூ மார்க்கெட் சாலையில் தேவாங்க கல்யாண மண்டபம் அருகே  சாய் கண்ணன் பட்டாசு கடை விழா  வெகுவிமர்சையாக இன்று காலை  நடைபெற்றது. இந்த பட்டாசு கடையை 

கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.   இதையடுத்து ஆதரவற்றோர் 50 பேருக்கு பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் சாய் கண்ணன் பட்டாசு கடை உரிமையாளர்

எஸ். செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். நகர மற்றும் அபிவிருத்தி குழு தலைவர் சோமு (எ) சந்தோஷ்,  சரவணபாபா  அறக்கட்டளை தலைவர் கே.மணிகண்டன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக் கே. செல்வராஜ், சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் சாய் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சிவகாசி விலையில் கோவையில் பட்டாசு கடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் லியோ சாட்,  பீக்காக், பேட் - பால்,  குற்றாலம்,  பீக்காக்,

 போட்டோ பிலிம், லாலி பாப், வாட்ஸ் அப்,  ஹெலிகாப்டர் ஆகிய புதிய ரக பட்டாசுகள் வந்துள்ளன. பட்டாசு கடையில் ரூ.5 ஆயித்துக்கு பட்டாசுக்கள் வாங்குபவர்களுக்கு வெள்ளிக்காசும், ரூ.10 ஆயிரத்திற்கு பட்டாசுகள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்படவுள்ளது. போலி விளம்பரங்களை நம்பாமல், நேரடியாக விற்பனையகத்துக்கு வந்து பட்டாசு ரகங்களை பார்த்து, தரமான பட்டாசுகளை குறைவான விலையில் வாங்கி தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடுமாறு கடை உரிமையாளர்  எஸ். செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.

-சீனி, போத்தனூர்.

Comments