செக்காரக்குடி தெற்கு ஓடை இணைப்பு சாலை போர்க்கால அடிப்படையில் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ தீர்வு!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள செக்காரக்குடி தெற்கு ஓடை இணைப்பு சாலையில் நேற்று பெய்த கன மழையால் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது, இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக நேரிட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனை நாளைய வரலாறு உள்ளிட்ட டிவி ஊடகங்கள் விரைவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர், ஶ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் மற்றும் செக்காரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டிய முயற்சிகளில் இறங்கினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனையடுத்து போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. இதற்காக தனி கவனம் செலுத்தி செயல்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா, ஶ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் செக்காரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஐ.ராமலெட்சுமி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள், ஒப்பந்ததாரர், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுமக்கள் பாராட்டு.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments