சிபிஎம் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்குப் ஓட்டப்பிடாரம் பஜாரில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!!

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா(102) நேற்று காலமானார். தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறைந்த  சங்கரய்யாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்போது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வராஜ், செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த   ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராகவன் ராஜகனி மாரியம்மாள் கணேசன் உலகநாதன் மாதர் சங்க செல்வி மற்றும் பொதுமக்கள் கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

ஓட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments