ஓட்டப்பிடாரம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை .!!!

 

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மணிகட்டி நகரைச்  சேர்ந்த அழகர்சாமி(60) என்பவர் தனது மூன்றாவது மகள் அழகுமாரியை(34) புதியம்புத்தூர் கீழதெருவை சேர்ந்த தனது தங்கை மகன் ஜெயபால் முருகன் என்பவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொடுத்துள்ளார். மேலும் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.  இதனால் அழகுமாரி மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையில் வீடு திறக்கப்படாததால் அவரது உறவினர்கள் வீட்டின் கதவை தட்டியும் திறக்காததால் வீட்டில் உள்ள ஓட்டை பிரித்து பார்த்தபோது  அழகுமாரி வீட்டின் மேற்கூரை கட்டையில்  சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த புதியம்புத்துர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட அழகுமாரி உடலை கைப்பற்றி வீட்டு பிரேத பரிசோதனைக்காக  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து புதியம்புத்தூர்  போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் .மேலும் திருமணம் ஆகி சுமார் நான்கு வருடங்களே ஆன நிலையில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கௌரவ் குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர் 

முனியசாமி.

Comments