கோவையில் சின்மயா மிஷன் சார்பில் டிசம்பர் 10 முதல் ஹனுமான் சாலிசா குறித்த சொற்பொழிவு!!


கோவை: வடவள்ளியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியின் கலையரங்கத்தில் டிசம்பர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு ஹனுமான் சாலிசா எனும் துதி பாடல் குறித்த சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது.பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று ஆர் எஸ் புரம் சின்மயா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

இதில், சின்மயா கார்டன் அறக்கட்டளையின் தலைவர் சுவாமினி சம்பிரதிஷ்டானந்தா மற்றும் பலர் கலந்து கொண்டு கூறியதாவது:-

சின்மயா மிஷனின் சர்வதேச தலைமை பொறுப்பில் இருக்கும் சுவாமி ஸ்வரூபானந்தா கோவையில் இந்த சொற்பொழிவை ஆங்கிலத்தில் நிகழ்த்த உள்ளார்.இதில் கோவை மட்டுமல்லாது அருகில் உள்ள திருப்பூர் பொள்ளாச்சி பகுதியில் இருந்து 2000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

ஹனுமான் சாலிசா பாடல்கள் மொத்தம் 40 உள்ளன. நாள் ஒன்றுக்கு 8 பாடல்கள் என 5 நாட்களில் 40 பாடல்களை குறித்த சுவாமிஜி அவர்களின் சொற்பொழிவு சிறப்பாக நடக்க உள்ளது.இதில் இளைஞர்களும், 40 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்வார்கள் என கருதுகிறோம்.பயமில்லாத நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கைக்கு ஹனுமான் சாலிசா பாடல்களை பாடுவது உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.www.hanumanchalisayagna.com. என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.மேலும் தகவலுக்கு : 9655245870 / 9787742559

-சீனி, போத்தனூர்.

Comments