பசுமை தமிழ்நாடு கொள்கைக்காக ஒரே இடத்தில் 10ஆயிரம் மர கன்றுகள் நடும் விழா - துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்..

-MMH

தமிழக முதலமைச்சரால் கடந்த ஆண்டு பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்,தொண்டு அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகளை நடவு செய்து தமிழகத்தை பசுமையாமக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் மூலம் இழந்த பசுமையை மீட்டெடுக்கவும், வெப்பநிலையைக் குறைக்கவும், குறைந்த ஒலி மற்றும் தூசி மாசு, இயற்கையாகவே குளிர் மற்றும் சுத்தமான காற்று, மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுவான சமூகங்களை உருவாக்கவும், இயற்கை வாழ்விடம் மற்றும் உயிர் பன்முகத்தன்மையை உருவாக்கவும், மேற்பரப்பு நீர் மட்டத்தை அதிகரிக்கவும், மண்ணின் தரத்தை வளப்படுத்துதலை கொண்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை தொடர்ந்து கோவை  பீளமேடு பகுதியில் உள்ள எல்காட் வளாகம்,டைடல் பார்க்கில் எச் டி.எப்.சி வங்கி மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் மாபெரும் மரம் நடும் விழா நடைபெற்றது.ஒரே இடத்தில் சுமார் 10,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டு வைத்து துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் ஐடி நிறுவனங்களில் பணியாளர்கள் , கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என பங்கேற்று மரங்களை நடவு செய்தனர்.இதன் தொடர்ச்சியாக 25000 மரக்கன்றுகள் இங்கு நடப்பட உள்ளது எனவும் கோவை மதுரை மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களில் மொத்தம் 75 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-சீனி, போத்தனூர்.

Comments