ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஒன்றியம் ஆழிக்குடி கிராமத்தில் சுமார் 300 பேருக்கு அதிமுக சார்பில் நிவாரணம்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில், வரலாறு காணாத தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால்  பாதித்த தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஒன்றியம் ஆழிக்குடி கிராமத்தில் சுமார் 300 பேருக்கு அதிமுக பொதுச்செயலாளர்  முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கினங்க.,  தூத்துக்குடி வடக்கு மாவட்ட  செயலாளர்,  அமைச்சர்  மாண்புமிகு கடம்பூர் செ.ராஜூ D.Ted., MLA அவர்கள் ஏற்பாட்டில், 

மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு  தேவையான அத்தியாவசிய பொருட்களை தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில்   கொள்கைப்பரப்பு து.செயலாளர் உயர்திரு அய்யாத்துரை பாண்டியன் அவர்கள், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய  செயலாளர் உயர்திரு.P.மோகன்  B.Sc., Ex.MLA அவர்கள்,

கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் உயர்திரு.I.இலட்சுமண பெருமாள் அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் உடன்  நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர், 

-முனியசாமி.

Comments