ராம்கோ சிமெண்ட்ஸ் சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.5-லட்சம் மதிப்பில் நிவாரணம் - விளாத்திகுளம் எம்எல்ஏ அவர்களிடம் வழங்கப்பட்டது.

  

ராம்கோ சிமெண்ட்ஸ்  சார்பாக புதூர் பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட  பொதுமக்களுக்கு ரூ.5-லட்சம் மதிப்பீட்டில் 500-க்கும்  மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களிடம் வழங்கினார்கள்.


இந்த நிகழ்வில் உடன் ராம்கோ சிமெண்ட் நிறுவனத் துணைத் தலைவர் மணிகண்டன் துணைப் பொது மேலாளர் ராமச்சந்திரன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்முர்த்தி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் கழக உறுப்பினர் பசும்பொன்  பழனிச்சாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் ராம்கோ சிமெண்ட் ஊழியர்கள்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர், 

-பூங்கோதை.

Comments