வில் வித்தை முதல் சிலம்பம் வரை 500 மாணவர்கள் கோவையில் ஒரே நேரத்தில் உலக சாதனை!!

சிலம்பம், குங்பூ, கராத்தே, வில்வித்தை, யோகா என ஐந்து கலைகளை ஐநூறு மாணவ, மாணவிகள் இணைந்து ஒரே நேரத்தில் செய்து உலக சாதனை முயற்சி செய்தனர். விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஐந்து கலைகளை ஐநூறு மாணவ, மாணவிகள் இணைந்து செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

ஃபைட்டர்ஸ் அகாடமி சார்பாக கோவை குணியமுத்தூர், சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலாயா பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யோகா, சிலம்பம், வில்வித்தை, கராத்தே,குங்பூ என ஐந்து கலைகளை ஒரே இடத்தில்  ஐநூறு மாணவ, மாணவிகள் இணைந்து செய்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சுமார் ஏழு வயது முதல் 17 வயது மாணவ,மாணவிகள் வரை ஒரு மணி நேரம் தொடர்ந்து செய்த இந்த நிகழ்வு நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை செய்த மாணவ, மாணவிகளை கூடியிருந்த பெற்றோர் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.

கல்வி பயில்வதோடு விளையாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும், அது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்த உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தியதாக பள்ளியின் தாளாளர் ரவீந்திரன், முதல்வர் கார்த்திகாயனி ஆகியோர் தெரிவித்தனர். தொடர்ந்து நோபல் உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் ரமேஷ் குமார் சிவராஜ் உலக சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments