கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டி!! கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி!!

கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 7வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் சுழல் முறை செஸ் போட்டியில்  பெலாராஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்க்ஷி பெடோரோவ் வெற்றி பெற்றார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றுது.இதில் அமெரிக்கா,ரஷ்யா,உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள்,தமிழக வீரர்கள் என கலந்து கொண்டு விளையாடினர்.

போட்டியில் பெலாரஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்ஸி ஃபெடோரோவ் வெற்றி பெற்றார்.தெலுங்கானாவை சேர்ந்த ஆதிரெட்டி அர்ஜுனுடன் டிரா செய்ததன் மூலம், அலெக்ஸி 7.5 புள்ளிகளைப் பெற்றார்.தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன் தலைவர் கோவை சக்தி குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் டாக்டர் எம்.மாணிக்கம்,கோவை மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் ஸ்ரீ செந்தில் சின்னசாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

-சீனி, போத்தனூர்.

Comments