எப்போதும் வென்றான கிராமத்தில் 80 வயது மூதாட்டி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை. நிவாரணம் வழங்கிய எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர்.!!!!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17@ 18 தேதிகளில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. ஓட்டப்பிடாரம் வட்டம் எப்போதும் வென்றான் கிராமத்தில் 80 வயது மூதாட்டி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கண்ணீர் மல்க அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மிகவும் பழைமையான  வீட்டில் குடியிருந்து வருகிறார், மழைநீர் வீட்டுக்குள் வந்ததால் தடுமாறி  மூதாட்டி கீழே விழுந்தது முகத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை யாரும் எங்களை  சந்திக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

இந்த செய்தியை அறிந்த எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் உடனடியாக அந்த மூதாட்டி வீட்டுக்கு  நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர், -முனியசாமி.

Comments