'ஷீரைசஸ்' என்ற ஸ்டார்ட் அப் மகளிருக்கான தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது!!


கோயம்புத்துார்: பிக்கி புளோ நடத்தியது 'ஷிரைசஸ்' கோவையில் ஸ்டார்ட் அப் கான்கிளேவ்.

 இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் பிரிவான பிக்கி லேடீஸ் ஆர்கனைசேஷன் (எப்எல்ஓ), கோவையில் ஷீரைசஸ் என்ற ஸ்டார்ட் அப் மகளிருக்கான தேசிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தியது.

கோவை பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லுாரியில் கடந்த டிசம்பர் 12 ல் நடந்த இந்த மாநாட்டில், 16 வகையான தொழில் பிரிவுகளை சார்ந்த  நிபுணத்துவம் வாய்ந்த பெண்கள் பங்கேற்று பேசினர். சவால்களுக்கு இடையே உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிலா அட்வைஸர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சவுமியா கேசவா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். கோவை பிக்கி புளோ அமைப்பின் தலைவர் ரமா ராஜசேகர் வரவேற்றார். நிகழ்ச்சியின் தலைவர் பூனம் பப்னா நிகழ்வின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினார். பி.எஸ்.ஜி., கல்லுாரியின் முதல்வர் டாக்டர் டி.பிருந்தா தலைமை உரையாற்றினார்.

கோவை பிக்கி புளோ அமைப்பின் தலைவர் ரமா ராஜசேகர் பேசுகையில், " தொழில் முனைவோராக முயற்சிக்கும் மாணவ, மாணவியருக்கு இது போன்ற மாநாடுகள், கருத்தரங்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோவையின் மகளிர் பிரிவு, பி.எஸ்.ஜி.கல்லுாரியுடன் இணைந்து இது போன்ற நிகழ்வுகளை நடத்துவது தொழில் மேம்பாட்டிற்கு உதவும்," என்றார்.

பி.எஸ்.ஜி.,கல்லுாரி முதல்வர் டாக்டர் டி.பிருந்தா பேசுகையில், " சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கடந்த 5 ஆண்டுகளில் தொழில் முனைப்பில் மகளிர் பங்களிப்பு 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

நாட்டில் 1.5 கோடி பெண்கள் தொழில் செய்து வருகின்றனர். 2.2 கோடி முதல் 2.7 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் மகளிர் தொழில் முனைவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது," என்றார்.

ஸ்வாதி ரோஹித் பேசுகையில், "  கோவிட் தொற்றுக்கு பிறகு பல்வேறு குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னையை தீர்க்கவும் உதவி செய்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கல்வி கற்கும் திறனை இவர்கள் இழந்து வருகின்றனர். இந்த குழந்தைகளை மீட்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன , " என்றார்.

பிளாட்டோ கலாணி நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரவி கல்லாயில், கேப்டஸ்ட் அன்ட் சியோ பிலிப் இணை நிறுவனர் யமுனா சாஸ்திரி,  டிபிஆர் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி ஆர்த்தி குப்தா உள்ளிட்டோர் நிஜவாழ்க்கையில் அனுபவங்களை பகிர்ந்து தொழில் முனைவோருக்கான ஆலோசனைகளை வழங்கினர்.

-சீனி, போத்தனூர்.

Comments