சிறுமியின் பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு விடுதலை???
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் 2021 ஜூன் 30ஆம் தேதி வண்டிப்பெரியார் சொரை எஸ்டேட்டில் தூக்கு போட்டு ஆறு வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் காவல் துறையினர் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அறிக்கையில் சிருமின்பலமுறை பாலியல் வன்முறையில் சுமார் மூன்று வயது முதலே ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளன. உடனடியாக காவல்துறையினர் இதை தற்கொலையிலிருந்து கொலை என மாற்றம் செய்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் அப்பகுதியில் வசித்து வரும் அர்ஜுனன் என்பவரை காவல் துறை கைது செய்தது. தற்பொழுது குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு வருடம் கழித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. கட்டப்பனை விரைவு நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பு வழங்கியுள்ளது சரியான ஆதாரங்கள் சம காவல்துறையின் சார்பாக சமர்ப்பிக்காததால் குற்றவாளி என கருதப்படும் அர்ஜுனன் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்.
இரண்டு வருடமாக குற்றவாளி என கருதி காவல்துறையினர் இந்த நபரை சிறையில் அடைத்து வைத்து இரண்டரை வருடம் இவர் தான் குற்றவாளி என துன்புறுத்தியதாகும் இதனால் மேல்முறையீடு செய்து அரசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் போவதாகவும் இந்த நபரைச் சார்ந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சிறுமியை இழந்த குடும்பத்தினர் நீதிமன்ற வளாகத்திலேயே கண்ணீர் மல்க சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு.
Comments