சோலையார் டேம் அருகே கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை!! பொதுமக்கள் மகிழ்ச்சி!!!

 

-MMH

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் எட்டாவது வார்டு கல்யாண பந்தல் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள மண் சாலை பல ஆண்டுகாலமாக தார் சாலையாக மாற்றி தர வேண்டி பொதுமக்கள் வால்பாறை எம்எல்ஏ அவர்களிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க வால்பாறை பகுதி எம்எல்ஏ அமுல் கந்தசாமி அவர்கள்  14 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி அதற்கான பணி தொடங்கப்பட்டது.

இதில் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். மண் சாலை கான்கிரீட் சாலையாக மாற்றப்பட உள்ளதால் சோலையார் டேம், கல்யாணப்பந்தல்,  முருக வழி, சேக்கல் முடி, புதுக்காடு ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்                                                                                                                                       மற்றும் வால்பாறை பகுதி நிருபர் 

-திவ்யகுமார்.

Comments