மூணாறு அரசு கல்லூரி கட்டிடம் கட்ட முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பம்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அரசு கல்லுாரி கட்டுவதற்கான முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

2018ம் ஆண்டு ஏற்பட்ட மழை சேதத்தில், நிலச்சரிவுகள் காரணமாக கல்லூரி சேதமடைந்தது. மூணாறு அரசு கல்லூரியில்  தற்பொழுது குறைந்த வசதிகளுடன் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் நடைபெற வேண்டிய படிப்பு தற்போது DTPC COTTAGE-ல் நடைபெறுகின்றது.

புதிய கட்டடம் கட்ட இடம் கிடைத்தாலும், தொழில்நுட்ப காரணங்களால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லூரியின் புவிசார் தொழில்நுட்பத் துறையினர் தலைமையில்  டி.டி.பி.சியின் கீழ் உள்ள பட்ஜெட் ஹோட்டல் நிலம், அதை ஒட்டிய வருவாய் நிலம் மற்றும் அருகிலுள்ள என்ஜிரிங்  கல்லூரியின் நிலம் உட்பட 20 ஏக்கரில் நிலம் மண் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டது.மண் பரிசோதனையின் விவரம்  20 நாட்களில் தெரிய வரும் என தொழில்நுட்ப துறையினர் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-அஜித், மூணாறு.

Comments