மதுக்கரை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்கள்!!
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தற்போது அதிக அளவில் தெருநாய்கள் உலா வருவதுடன் தனியாக வருகின்ற பொதுமக்கள், பள்ளி குழந்தைகளை கடிப்பதாகவும், எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
பொதுமக்களின் அச்சத்தை போக்க தகுந்த நடவடிக்கை ஏற்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments