குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற குளோபல் அலுமினி மீட்டிங்கில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர்...

 


கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் குளோபல் அலுமினி மீட் 2023 நடைபெற்றது. இந்நிகழ்வில் 8 முன்னால் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்புமிக்க முன்னாள் மாணவர் என்ற விருதுநகர் பெற்றனர். இதில் சிறந்த சமூக சேவைக்கான விருது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திற்கும் அல்மா மேட்டருக்கான தேவைக்காக விருது ஜெனிடிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ரமேஷ் க்கும், சிறந்த தொழில் முனைவர் விருது திருவேணி எர்த் மூவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயனுக்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சிறப்பு விருது இஸ்ரோவின் தெர்மல் சிஸ்டம்ஸ் குரூப் பிரிவு தலைவர் குருதத் க்கும், நிபுணத்துவ விருது வியூகம் நிலைத்தன்மை சிமெண்ட் லிமிடெட் தலைவர் அந்தராமன் சுப்பிரமணியன் க்கும், தொழில்துறை சிறப்பு விருது ஜிஎஸ் ஒன் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி சுவாமிநாதனுக்கும், ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் விருது அனிமேக்கர் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசராகவன் க்கும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றவர்கள் சிறப்புரை ஆற்றினர்.

-சீனி, போத்தனூர்.


Comments