வன விலங்குகளுக்கு உணவு அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!! பொதுமக்கள் கோரிக்கை!!!

 

கோவை மாவட்டம் வால்பாறை இயற்கை எழில் மிகுந்த சிறந்த சுற்றுலா தளமாகும். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர்  வனத்துறையினர் விடுத்துள்ள அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மீறி செயல்படுகின்றனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


வனத்துறையினர் தடைவிதித்து உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுப்பது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மலைப்பகுதி வழியாக செல்வோர் அங்கங்கே நிறுத்தி மலைப்பாதையில் தென்படும் சிங்கவால் குரங்குகள், வரையாடுகள்  போன்றவற்றிற்கு தாங்கள் கொண்டுவரும் உணவு பொருட்களை வீசி எறிந்து விட்டு செல்கின்றனர் .சிலர் வாகனங்களை நிறுத்தி அவற்றுக்கு தின்பண்டங்களை கொடுத்தும் செல்கின்றனர். இது போன்று சாலையில் உணவுப் பொருட்களை சாப்பிட்டு பழகிய வனவிலங்குகள் சாலை அருகே சுற்றி வருவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.


மேலும் சில சமயங்களில் உணவு பண்டங்களை பிடுங்கியும் சாப்பிடுகின்றன. இதனால் மனித-வன விலங்குகள் மோதல் ஏற்படுகிறது. வால்பாறை செல்லும் வழியில் ஆழியாறு, அட்டகட்டி போன்ற இடங்களில் அதிகமான குரங்குகள் சுற்றி வருகின்றன இந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி அவற்றுக்கு தாங்கள் கொண்டுவரும் உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர் இது போன்று செயல்பாடுகளால் சாலை அருகே சுற்றி வரும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு விபத்தும் ஏற்பட்டு வருகிறது எனவே இது போன்று வன விலங்குகளுக்கு உணவு அளிப்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

வால்பாறை பகுதி நிருபர்

-திவ்யகுமார்.

Comments