வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே குடிநீர் குழாயின் அவல நிலை!!!
கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செய்கிறார்கள் அவ்வாறு வந்து செல்லும் பயணிகளின் குடிநீர் தேவைக்காக புதிய பஸ் நிலையம் அருகே தொட்டியுடன் கூடிய குடிநீர் குழாய் உள்ளது பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் இந்த குடிநீர் குழாயை பயன்படுத்தி வந்தனர் இந்த சூழ்நிலையில் சிலர் இந்த குடிநீர் குழாய் பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு இருசக்கர வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர்.
சில மர்ம நபர்கள் குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் குடிநீர் பிடிக்க முடியாமல் அவதி அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து பயணிகளின் சார்பாக வேண்டுகோள் வைக்கப் படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.
Comments