ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு பொறுப்பாளர்கள் நியமனம்... டிடிவி தினகரன் அறிவிப்பு!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு அமமுக கட்சி சார்பில் பொறுப்பாளர்களை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

நடைபெற இருக்கின்ற 2024  நாடாளுமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நியமனம் செய்து வருகின்றனர், 

அதன் தொடர்ச்சியாக ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு K. பெரியசாமி அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் மற்றும் K உலகைய்யா  மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் வழிகாட்டுதலின்படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய பொறுப்பாளர்கள் நேற்று தென்மண்டல பொறுப்பாளர் கயத்தார் ஒன்றிய பெருந்தலைவர் எஸ் பி எஸ் பி மாணிக்கராஜா அவர்கள் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபெருமாள் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

அதேபோல் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு P செல்லத்துரை என்ற எம் எஸ் செல்வம் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் எஸ் கிருஷ்ணசாமி மாவட்ட புரட்சி தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

ஓட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments