காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணி துறை ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் காசி விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் - யை ரத்து செய்து ஜி.பி.எப் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தினக்கூலி பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி  கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்பாட்டத்தில் கோவை மாவட்ட பொதுப்பணித் துறையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments