எட்டையபுரம் பாரதியார் மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்!!!!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமாக நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் சார்பாக (18.11.23)(17.12.23)  ஒரு மாத காலமாக ஒவ்வொரு நாட்களிலும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுகளையும் கருத்தரங்கங்கள் ஊர்வலங்கள் பனை விதைகள் நடுதல் என 30 நாளும் 30 விழாக்களாக ஒவ்வொரு   பள்ளிகளிலும் கல்லூரியிலும் மரக்கன்றுகள் நடுதல் செய்து வந்த நிலையில், இன்று (15.12.23) தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் கல்லூரியில் மகளிருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் மற்றும் மரக்கன்றுகள் நடுவதின் முக்கியத்துவம் குறித்தும் கருத்தரங்காக படம் விளக்கம் நிகழ்த்தப்பட்டது.

இன்நிகழ்வில் கல்லூரி முதல்வர் பேபி லதா தலைமை வகித்தார்கள் (NSS) நாட்டின் நலப்பணித் திட்ட அலுவலர் ராணி வரவேற்று பேசினார் இதில் பசுமை இயக்கச் செயலாளர் ஜெகஜோதி கருத்து உரை வழங்கி பேசினார்.  அகத்தியர் மலை பாதுகாப்பு மக்கள் சார்மைய பொறுப்பாளர் மதிவாணன் பட விளக்கங்களுடன் உரையாற்றினார் இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் சேவா சங்கம் தொண்டர்கள் ந.பூங்கோதை விளாத்திகுளம் கண்ணன் வெங்கடேஷ் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்து சிறப்பாக செயல்படுத்தி வரும் நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் பி கே நாகராஜன் கலந்துகொண்டு மரக்கன்றுகள் வழங்கியும் சிறப்பித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

விளாத்திகுளம் நிருபர், 

-பூங்கோதை.

Comments