சைமா முன்னாள் தலைவர் கே.வி.சீனிவாசனுக்கு சைமா சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது!!


கோவை: சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற சைமா முன்னாள் தலைவர் கே.வி.சீனிவாசனுக்கு சைமா சார்பில்  பாராட்டு விழா நடைபெற்றது. 

சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ITMF ) என்பது 1904-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பழமையான அரசு சாரா வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகும். ITMF  பருத்தி / பஞ்சு உற்பத்தியாளர்களில் இருந்து நூல் நூற்பவர்கள், துணி உற்பத்தியாளர்கள், துணி பதனிடுபவர்கள் மற்றும் சாயமிடுபவர்கள், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியாளர்கள் போன்றவர்களையும் ஜவுளி இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி சார்ந்த இரசாயன உற்பத்தியாளர்கள் என ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியின் 90 சதவீத உற்பத்தியை உள்ளடக்கிய கூட்டமைப்பாகும்.

சுருக்கமாக, ITMF   பலவகையான பஞ்சு மற்றும் பலவகையான ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் துறையின் உலகளாவிய அமைப்பாக விளங்குகிறது. இன்று ITMF   கிட்டத்தட்ட 40 சங்கங்கள் மற்றும் 100 நிறுவனங்களை அனைத்து பிரிவுகளிலிருந்தும் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில் இருந்தும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ITMF   உறுப்பினர்கள் அனைத்து முக்கிய பஞ்சு. ஜவுளி மற்றும் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.  இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு, இந்திய பருத்தி சங்கம் மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் ஆகியோருடன் சேர்ந்து 14 இந்திய நிறுவனங்களும்  ITMF  - ன் உறுப்பினர்களாக உள்ளனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையில் உள்ள பிரீமியர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், டாக்டர் கே.வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் மேற்படி சங்கத்தின் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இவர் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நான்காவது தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்பு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், கோவை, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம், கோவை மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம், மும்பை ஆகியவைகளின் தலைவராக செயல்பட்டுள்ளார்.  ITMF-ன் நோக்கம், “தெரிவிப்பது, இணைப்பது, பிரதிநிதித்துவம் செய்வது” என்பதாகும். 

கீழ்காணும் வசதிகளை ITMF வழங்குகிறது.  

*    சர்வதேச ஜவுளித் தொழில் புள்ளி விவரங்கள் 

*    சர்வதேச ஜவுளி இயந்திரங்களின் ஏற்றுமதி புள்ளி விவரங்கள் 

*    சர்வதேச உற்பத்தி செலவு ஒப்பீடு 

*    பருத்தி மாசு அறிக்கை 

*    உலக ஜவுளித் தொழில் குறித்த கணகெடுப்பு 

மேலும் ITMF  அதன் உறுப்பினர்களுக்கு சிறப்பு காணொளி கலந்துரையாடலில் பங்கேற்கவும், தொழில்துறை தலைவர்களுடன் சிறப்பு நேர்காணல்கள் மூலம் விவாதம் செய்யவும் கேட்கவும் வாய்ப்பளிக்கிறது. ITMF ஆனது அரசு, அரசுகளுக்கிடையேயான நிறுவனங்கள் பல பங்குதாரர்களின் முயற்சிகள் போன்றவற்றுடன் தொடர்புடைய தொழில்துறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த தொடர்பு  ITMF  தொழில்துறையின் துடிப்புக்கு நெருக்கமாக இருக்க உதவுகிறது.

-சீனி, போத்தனூர்.

Comments