மஜக பிரமுகர்கள் பிரேமலதா அம்மையாரிடம் நேரில் ஆறுதல்!!

இன்று 29.12.23 கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் தீவுத்திடலுக்கு வருகை தந்தார்.

பிரமுகர்கள் செல்லும் வழியில் அவரும், த.கொ. இ.பே. தலைவர் தனியரசு அவர்களும் சென்றனர். அங்கு கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செய்த பிறகு, பொதுச் செயலாளர் அவர்கள் பிரேமலதா அம்மையாரிடமும், அவர்களின் இரு புதல்வர்களிடமும் மஜக-வின் சார்பில் இரங்கலை தெரிவித்தார். பிரேமலதா அம்மையார் அவர்கள் மனம் கலங்கி பேசினார். அப்போது கொரோனா தொற்று காரணமாக எல்லாம் ஒரு மணி நேரத்தில் முடிந்து விட்டது என்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், நீங்கள் மனைவியாக இருந்தது மட்டுமல்லாமல் ஒரு தாய் போலவும் அவரை கவனித்துக்கொண்டீர்கள் என்றதும், அவர் கண்கலங்கி தன் பிள்ளைகளை திரும்பி பார்த்து, இது அவர்களுக்கு தெரியும் என்றார். 

நீங்கள் மன தைரியம் இழக்க கூடாது என்று ஆறுதல் கூறிவிட்டு, அவரது சகோதரர் சுதிஷ் அவர்களை சந்தித்ததும் அவர் பழைய நினைவுகளுடன் கட்டிப் பிடித்துக்கொண்டார். அவரிடம் பிறகு உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.

பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், கேப்டன் அவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றவர் என்றும், ஈழத் தமிழர்கள் மீது கொண்ட அக்கறையால் தனது மகனுக்கு பிரபாகரன் பெயரை சூட்டியதையும், காவிரி உரிமைக்காக நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கர்நாடகாவுக்கு  மின்சாரம் தரக்கூடாது என நடிகர், நடிகைகளை திரட்டி போராட்டம் நடத்தியதையும் குறிப்பிட்டார்.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டப் போது, அச்சம்பவத்தை கண்டித்து அதே இடத்திலேயே மசூதியை கட்டித்தர வேண்டும் என பேட்டியளித்து மதச்சார்பின்மை பேசியவர் கேப்டன் என்றும் புகழாரம் சூட்டினார். அச்சமயத்தில் IJK தலைவர் பாரிவேந்தர் MP, நடிகர் ரஜினி, பார்த்தீபன், வாகை சந்திரசேகர், ராதாரவி, இயக்குனர் சுந்தர் C, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து வருகை தந்தனர்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணைச்செயலாளர் முஹம்மது அஸாருதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துர் ரஹ்மான், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தாரிக், MJTS மாநில துணைச்செயலாளர் இப்ராஹீம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ஜாஹீர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கமால் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments