மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் நிவாரணம் வழங்கினார்!!
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாப்பிள்ளையூரனி ஊராட்சி ராஜபாளையம்,சோட்டையன்தோப்பு, மாதாநகர் போன்ற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ MLA அவர்கள் ஏற்பாட்டில், 500 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி,பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள், கோதுமை மாவு,ரவை,தேங்காய்,பிரட், பிஸ்கட்,மற்றும் குடிதண்ணீர் பாட்டில் ஆகியவற்றை ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.மோகன் Ex.MLA அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் R.ஜவகர் அவர்கள், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயளாலர் T.பால்ராஜ், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.
Comments