தேசிய ஹாக்கி மாணவிக்கு தமிழ்நாடு தேவேந்திர குல மத்திய மாநில அரசு ஊழியர் சங்கம் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது!!
தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் வட்டம் வரதராஜபுரம் அருகில் காடுவெட்டிகுரு கிராமத்தில் தேசிய ஹாக்கி விளையாட்டு மாணவி சந்திரிகா இவர் தூத்துக்குடி தஸ்நேவிஸ் மேல்நிலைப்பள்ளியில் 11 வது வகுப்பு படித்து வருகிறார். அவரது பள்ளி சான்றிதழ் மற்றும் விளையாட்டு சான்றிதழ் அனைத்தும் கடந்த டிசம்பர் மாதம் கனமழையால் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது.
ஒட்டப்பிடாரம் அருகே முப்பலிபட்டி கிராமத்தில் உறவினர் வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் பஞ்சாப்பில் தேசிய அளவிலான போட்டிகள் 6.1.2014 முதல் 11.1.2024 வரை ஜலந்தர் நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு தேவேந்திர குல மத்திய மாநில அரசு ஊழியர் சங்கம் நிதி உதவி மற்றும் இந்த மாணவிக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தையும் வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தேவேந்திரகுல மத்திய மாநில அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அந்தோணி ராஜ் மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வகுமார் மாவட்ட பொருளாளர் குணசேகரன் வட்டார தலைவர் முத்துவேல்சாமி வட்டார செயலாளர் சந்திரசேகர் வட்டார பொருளாளர் கருப்புசாமி மற்றும் ஒட்டப்பிடாரம் ஊராட்சி அலுவலக அளவிலான கணக்காளர் வனிதாகந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்கு,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.
Comments