வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் சாலை தரமற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் சாலை மற்றும் காந்தி சிலை பின்புறமாகவும் வாழைத்தோட்டம் ஸ்கீம் ரோடு குமரன் ரோடு சாலை வழியாக வரும் இரு சாலை மிகவும் தரமற்று உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த சாலைகளானது சில மாதங்களுக்கு முன்பாக தான் பல லட்சம் ரூபாய் செலவு செய்து போடப்பட்டுள்ளது. இந்த கான்கிரீட் சாலை போடப்பட்டு சில மாதங்களே ஆகின்றது. ஆனால் அதற்குள் பழுதடைந்து உள்ளதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே சாலையில் முறையாக பராமரித்து உடனடியாக சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சார்பாக வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

நாளை வரலாறு செய்திகளுக்காக,

வால்பாறை பகுதி நிருபர்,

-திவ்யகுமார்.

Comments