மூணாறு அரசு கல்லூரியில் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அரசு கல்லூரியில் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
டிசம்பர் மாதத்தில் மிகவும் சிறப்பான நாள் உலகின் இரட்சகர் கிறிஸ்து இயேசுவின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மூணாறு அரசு கல்லூரியில் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் மனேஷ் என்.ஏ,
துணைக் கல்வி முதல்வர் வந்தனா,
உடற்கல்வி டாக்டர் ஜெயராஜன் டேவிட்,
ஆர்ட்ஸ் கிளப் அட்வைசர் ஞானேஸ்வரன்,
யூனியன் அட்வைசர் நிகிலா டி.வி,
கல்லூரி சேர்மன் அமல் பிரேம்,
கோம்மேர்ஸ் டிபார்ட்மென்ட் சுமலதா,
எக்கனாமிக்ஸ் டிபார்ட்மெண்ட் சோனி டி.எல்,
மலையாளம் டிபார்ட்மெண்ட் ராஜி பிரபா,
கணினி பிரிவு சிவ பிரசாத்,
கணிதம் டிபார்ட்மெண்ட் ஸ்ரீ அஜித்,
பி டி ஏ பிரிவு கிளாட்வின் தோமஸ்,
நன்றி உரை-மணிகண்டண் இரண்டாம் ஆண்டு முதுகலை.ஆகியோர் வாழ்த்துக்களை பகிர்ந்தும் கிறிஸ்துமஸ் தினத்தின் சிறப்பையும், கிறிஸ்து பிறப்பின் சிறப்பையும் மிக எளிமையாக மாணவர்களுக்கு தெரிவித்தனர்.மேலும் அனைத்து டிபார்ட்மெண்ட் சார்பாக குழந்தை இயேசுவிற்காக புல் குடிசைகள், கிறிஸ்துமஸ் தாத்தாவின் வேஷங்கள், நடனங்கள், பாடல்கள் போன்றவை மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் நடுவர்கள் தலைமையில் தீர்ப்புகளும் வெளியிடப்பட்டது.
இதில் எல்லா டிபார்ட்மெண்ட்க்கும் பல்வேறு பரிசுகள் கிடைத்தது. தங்களுக்கு சொந்தமாக கலைக் கல்லூரி இல்லை என்றாலும் கிடைத்த இடத்தில் மிக சிறப்பாக கிறிஸ்துமஸ் தின விழாவை மூணாறு அரசு கல்லூரி மாணவர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி முடித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித், மூணாறு.
Comments