கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையத்தில் பழங்குடியின பெண்கள் பயன்பெறும் வகையில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் ஸ்மார்ட் டைலர் திட்டம் துவக்கம்...

 


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையத்தில் பழங்குடியின பெண்கள் பயன்பெறும் வகையில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் ஸ்மார்ட் டைலர் திட்டம் துவக்கம் 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 20 டைலரிங் இயந்திரங்கள் மூலம் தையல் பயிற்சியளிக்கப்பட உள்ளது கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே  தோலம்பாளையத்தில் , ஸ்மார்ட் டைலர்  திட்டத்தை 2023 டிசம்பர் 19ஆம் தேதி செவ்வாய் அன்று துவக்கியது. 

ரோட்டரி இன்டர்நேஷனல் ஆர்ஐடி 3201 சார்பில் "ஸ்மைல்" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில், பழங்குடியின பெண்கள் பயன்பெறும் வகையில் தொழில் பயிற்சியை அளித்து வருகிறது. இதில் 50 பழங்குடியின பெண்கள் டெய்லரிங் பயிற்சி பெற்று, புதிய தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொண்டு, சுயசார்பு வாழ்க்கைக்கும் வேலைக்கும் பயிற்சி பெறுவர்.

இந்தப் பயிற்சி மையத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ளார் 20 டைலரிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட பெண்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள இதில் பயிற்சிகள் தரப்படுகிறது. இதற்கான பயிற்சி கட்டணமாக மாதந்தோறும் 8000 ரூபாய் வீதம் 96000 ரூபாயை கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் செலுத்துகிறது. இந்த பயிற்சியானது காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, வாரத்திற்கு மூன்று நாள் விதம் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திட்ட துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப் ஆர் ஐ டி 3201 மாவட்ட இயக்குனர் எஸ் கோகுல்ராஜ் பங்கேற்று துவக்கி வைத்தார்.

கௌரவ விருந்தினராக துணை கவர்னர் வெங்கட் பங்கேற்றார். ரோட்டரி கிளப் தலைவர் ரோகிணி சர்மா, செயலாளர் முர்து ஸா ராஜா ஆகியோர் இந்தத் திட்டத்தை, மாவட்ட முன்னோடி திட்ட தலைவர் ராஜேஷ் நந்தா வழிகாட்டுதலின்படி. சின்மயா கிராம மேம்பாட்டு அமைப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் டாக்டர் மீரா தலைமையிலான அணி செயல்படுத்துகிறது. திட்ட துவக்கத்தின் போது ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட்சிட்டி உறுப்பினர்கள் ரோட்டேரியன்கள் ஜெயஸ்ரீ கோட்டா,ஸ்வேதா குப்தா,  ரஷிதா ராஜா மற்றும் சுஜா அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments